Ad Code

Responsive Advertisement

கண் கருவளையம் உருவாக காரணம்! - தீர்வுகள் என்ன!

 




அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு, நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது.


தூக்கம் உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு நாளுக்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்கவேண்டும்.


கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் சில நேரம் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும். அதிகமாக கண்களை கசக்குவதால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையடைகிறது.


சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம். சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்கு தீர்வு.


பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது.


அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலில் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. அதனால் வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது கண்ணை குளிர்ச்சிபடுத்தும் விதமாக கேரட் அல்லது வெள்ளரிப் பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தால் நலம் பயக்கும். இயற்கை முறையில் தீர்வு:


உருளைக்கிழங்கை அரைத்து, கண்களைச்சுற்றி பூசி வந்தால், கருவளையம் மறையும்.


தக்காளி சாறு மற்றும் எலுமிச்சைச்சாறைக் கலந்து கருவளையத்தின் மீது பூசி வர வேண்டும். பூசிய 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால், கருவளையம் நீங்கி அழகு பெறலாம்.


இரவில் கண்களைச் சுற்றி, பாதாம் எண்ணெய்ப் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வந்தால், கரு வளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.


நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்வும் கொடுத்தால், கருவளையத்திற்கு சீக்கிரமே விடை கொடுத்து அனுப்பிவிடலாம்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement