Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தயார்: முதல்வர் விரைவில் வெளியிடுகிறார்

 





பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான, மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், மதிப்பெண்  விரவங்கள் மற்றும் தேர்வு முடிவுகளை இரண்டொரு நாளில் முதல்வர் வெளியிட உள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகள் குறித்து, கடந்த மாதம் 26ம் தேதி அறிவிப்பு ஒன்றை  முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார். 


அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 3 பாடங்களில் பெற்ற உயர் மதிப்பெண்களில் இருந்து 50 சதவீதம், பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் எழுத்து தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 20 சதவீதம், பிளஸ் 2  செய்முறைத் தேர்வில் இருந்து 30 சதவீதம் மதிப்பெண்களை கொண்டு 100 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படும் என்றும், இந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்ணும் கணக்கிடப்பட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இம்மாதம் 31ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்து இருந்தார்.


அதற்கான அரசாணையையும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் மதிப்பெண்கள் வழங்கும்போது எந்த முறைகளை கையாள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை தேர்வுத்துறை ஏற்கெனவே கேட்டிருந்தது. 


அவற்றை பெற்று மேற்கண்ட அறிவிப்பின்படி பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் பணிகள் இரவு பகலாக நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில்  முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்ல தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இன்னும் இரண்டொரு  நாளில் முதல்வர் மேற்கண்ட பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement