Ad Code

Responsive Advertisement

நிமிடத்தில் ரூ.10 லட்சம் வரையில் தனி நபர் கடன்.. எங்கு.. எப்படி பெறுவது..!

 




ஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, முன்னணி டிஜிட்டல் கடன் வழங்குனரான LoanTapவுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.   இதன் இந்த அறிவிப்பு, உஜ்ஜீவனின் ஏபிஐ (APIs) வங்கி முயற்சியின் ஒரு பகுதியாகும்.


இந்த சிறு நிதி வங்கியின் இந்த முயற்சியின் மூலம் 150-க்கும் மேற்பட்ட ஏபிஐ-க்கள் கிடைக்கப்பெறும். இதன் மூலம் டிஜிட்டல் கடன், டிஜிட்டல் பொறுப்புகள் மற்றும் ஃபின்டெக்குகளுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 


சம்பளதாரர்களுக்கு எளிதில் கடன் 


இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேவைகளை பெற உதவும். இது மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்த உதவும். மேலும் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த புதிய நடவடிக்கைகள் சாதகமாக இருக்கலாம். விரைவில் கடன் பெற வழிவகுக்கலாம்.


லோன்டேப் வாடிக்கையாளர்கள் 


இந்த ஒப்பந்தம் முற்றிலும் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிமிடங்களில் கடன் பெற ஒப்புதல் பெறலாம். loanTap ஏற்கனவே அதன் ஆப் வழியாக சுமார் 32,000 வாடிக்கையாளார்களுக்கு சேவையை அளித்துள்ளது.


லட்சக்கணக்கில் கடன் 


உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரையிலான தனி நபர் கடன்களை, அதிகபட்சமாக 48 மாத கால அவகாசத்துடன் லோன்டேப்பின் மூலம் வழங்கி வருகின்றது. உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி பல்வேறு வகையான சேவைகளைக் கொண்டிருந்தாலும், இந்த கூட்டணி மூலம் இன்னும் வாடிக்கையாளர்களுக்கான சேவையினை மேம்படுத்த முடியும்.


லோன்டேப் சேவை 


நாளுக்கு டிஜிட்டல் தேவை அதிகரித்து வரும் நிலையில், வணிகத்தினை அதிகரிக்க டிஜிட்டல் சேவை அவசியமான நிலையில், லோன்டேப்புடன் கூட்டணி வைப்பது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. ஏனெனில் இது சிறந்த உள்ளூர் கடன் வழங்குனர். பர்சனல் லோன், EMI free loan, தனி நபர் ஓவர்டிராப்ட் வசதி, கிரெடிட் கார்டு டேக் ஓவர் கடன், அட்வான்ஸ் சேலரி கடன், ஹவுஸ் ஓனர் கடன் லோன் உள்ளிட்ட பல திட்டங்களை லோன்டேப் வழங்கி வருகின்றது.


புரோகேப்புடனும் ஒப்பந்தம் 


தற்போது இந்த நிறுவனம் நாடு முழுவதும் டெல்லி, பெங்களூர், புனே, மும்பை, சென்னை, கொல்கத்தா, நொய்டா, வதோதரா, நாசிக் உள்ளிட்ட 22 நகரங்களில் தனது செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. உஜ்ஜீவன் ஏற்கனவே Desiderata Impact Ventures Private Limited என்ற progcaap என்று அழைக்கப்படும் ஆப்புடன் ஒரு ஒப்பந்தத்தினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது MSMEக்களுக்கு சேவை அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement