Ad Code

Responsive Advertisement

பள்ளிக்கல்வி துறையில் ஆணையர் நியமனத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற ஆசிரியர்வழக்கு

 





அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனராகவும், பின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். 


பள்ளிக்கல்வி துறை செயலாளர் உள்ள நிலையில் எந்த வித சிறப்பு தகுதியும் அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது. எனவே, பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தவறு என்றும் ஆணையருக்கு பதிலாக கல்வித் துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement