Ad Code

Responsive Advertisement

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்..!' - வாசகர் பகிர்வு

 




எங்களுக்கு மூத்த குழந்தையாக என் மகள் பிறந்தபோது அப்பாவாக அப்போது உணரவில்லை, நான் வரம்பெற்றவன் என்று. இயற்கையாகவே அப்பா, மகள் உறவு என்பது மிகப் பெரிய பாசப்பிணைப்பை ஏற்படுத்தக்கூடியதுதான் போலும். என் மகள் வளர வளர அவளின் அன்பில் பல சமயங்களில் நெகிழ்ந்தும் கரைந்தும் இருக்கிறேன். அம்மாவின் பாசம், மனைவியின் நேசத்தைவிட மகளின் அன்பு பல நேரங்களில் உருகச் செய்திருக்கிறது.


நான் வெளியே சென்றிருக்கும் போதெல்லாம் தொலைபேசி வாயிலாக என் மகள் தொடர்புகொண்டு, ``எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா.. எப்பப்பா வருவீங்க’’ என்று அந்த மழலைக் குரலில் கேட்கும்போது எல்லாம் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன்.


முதலில் பெண் குழந்தை பிறந்தால் அடுத்து பிறக்கும் குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்ற சொல்வாடை, அப்பாக்களுக்கும் பொருந்தும். தாயிடம் கிடைத்த பாசம், மனைவியிடம் கிடைக்கும் நேசத்தைவிட என் மகளின் அன்பு நெகிழ்வானது.


மகள்கள் அப்பாக்களுக்காக இயற்கை உருவாக்கிய அன்பு உறவு என்றுதான் சொல்லவேண்டும். மகள்கள் இல்லாத அப்பாக்களின் வாழ்க்கை வெறுமையானது. மகள்கள்(பெண்) இல்லாத குடும்பம் முழுமை பெற்ற குடும்பம் ஆகாது. அப்பாக்களின் திருமண வாழ்க்கை மகள்களின் பிறப்பால் உச்சமடைகிறது. ஒவ்வொரு கணமும் மகள்கள் அப்பாக்களுக்காவே வாழ்கிறார்கள் என்பதை என் மகளின் அன்பால் நான் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன்.


இதனால்தான் தந்தை பெரியார் பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது ஆண் வர்க்கத்திடம் அவர்களின் மகள்களை முன்னிறுத்தி உரிமைகளைக் கேட்டார். மகள்கள் உரிமைகளைப் பெறுவதை எந்த அப்பாக்களும் எதிர்க்கமாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்த காரணத்தால்தான் அவர் அவ்வாறு கேட்டார்.


என் மகளின் அபரிமிதமான அன்பும் பாசமும் பல சமயங்களில் என்னை நெகிழச்செய்து கண்கலங்க வைத்திருக்கிறது. மனித உறவுகளில் மிக அற்புதமானதும் உன்னதமானதும் அப்பா, மகள் உறவுதான் என்று சொல்வேன். கடவுள் எப்படி இருப்பார் என்று அப்பாக்களிடம் கேட்டால் தன் மகள்களைப் போலத்தான் இருப்பார் என்றுதான் சொல்வார்கள்.

-காட்டாவூர் இலக்கியன்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement