Ad Code

Responsive Advertisement

மாற்றுப்பணி ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்

 





பள்ளி கல்வி இயக்குனரகத்தில் மாற்றுப் பணியில் இருந்த ஆசிரியர்கள், அவரவர் பள்ளிகளுக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு உள்ளனர். 



ஆசிரியர்கள் அலுவலக பணி பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. பள்ளி கல்வி அமைச்சரான மகேஷ், துறையின் பொறுப்பை கவனித்தாலும், முதல்வர் ஸ்டாலினின் நேரடி பார்வையில் நிர்வாகம் நடக்கிறது.



பள்ளி கல்வி செயலர் உஷா, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.அந்த வகையில், பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பல ஆண்டுகளாக அலுவலக பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் அதிரடியாக இடம் மாற்றப் பட்டு உள்ளனர். கற்பித்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள், அலுவலக பணிகளை பார்க்கக் கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது.



மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்தில் அலுவலர்களாக பணி யாற்றியவர்கள், அவரவர் நியமிக்கப்பட்ட இடங்களுக்கே மாற்றப்பட்டு உள்ளனர். சென்னையில் துவங்கியுள்ள இந்த மாற்றம் படிப்படியாக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகளை, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தீவிரப்படுத்தி உள்ளார்.


இந்த மாற்றத்தால், பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களுக்கு ஆசிரியர்கள் கிடைத்து உள்ளதாக மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement