ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரிடம் ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.17½ லட்சத்தை நூதன முறையில் அபேஸ் செய்தது தொடர்பாக அவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரிடம் ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.17½ லட்சத்தை நூதன முறையில் அபேஸ் செய்தது தொடர்பாக அவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்
திருச்சி பீமநகர் மேலகண்டித்தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 59). இவர் ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா. இந்தநிலையில் ராமகிருஷ்ணன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வங்கி சேமிப்பு கணக்கு
நானும், எனது மனைவியும் வீட்டில் தனியாக வசித்து வருகிறோம். எங்களுடைய சேமிப்பிற்காக திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ஜாயிண்ட் சேமிப்பு கணக்கு தொடங்கி இருந்தோம். எங்களது வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.17 லட்சத்து 45 ஆயிரத்து 259 இருந்தது. கடந்த 3-ந் தேதி எனது வீட்டு தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி எனது வங்கி ஏ.டி.எம். அட்டை காலாவதி ஆகி விட்டதாகவும், உடனடியாக அதை புதுப்பிக்க வேண்டுமென்றும் கூறினார். பின்னர் அவரே எனது ஏ.டி.எம். எண்ணின் ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டார்.
மேலும் எனது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும் என்றும், அந்த எண்ணையும் சொல்ல வேண்டும் என்றார். நானும் கொரோனா காலத்தில் ஏ.டி.எம். செயல்படாவிட்டால் சிரமமாகி விடும் என்பதால் ஓ.டி.பி. எண்ணை கூறினேன்.
நூதன கொள்ளை
அதன் பிறகு ஏ.டி.எம். அட்டையை புதுப்பித்து விட்டதாக கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார். சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. உடனே இது குறித்து எனது பேரன் கிருபாகரனிடம் கூறினேன்.
எனது பேரன் இ-மெயில் ஐ.டி.யை பயன்படுத்தி சட்டவிரோத பரிவர்த்தனை நடப்பதாக கூறினான். அதன் பிறகு பணம் எடுக்கப்பட்டதாக எனக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை. நானும் நிம்மதியாக இருந்தேன்.
ரூ.17½ லட்சம் அபேஸ்
பின்னர் எனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுக்க வங்கிக்கு சென்றேன். அங்கு வங்கி மேலாளரிடம் கேட்டபோது, எனது சேமிப்பு கணக்கில் வெறும் ரூ.259 மட்டுமே இருந்ததாக மேலாளர் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் எனது வங்கி பண பரிவர்த்தனை பட்டியலை வாங்கி பார்த்தபோது ரூ.10 ஆயிரம் என தொடர்ந்து ரூ.17 லட்சத்து 45 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. வயதான காலத்தில் எங்கள் தேவைக்காக வைத்திருந்த எனது ஓய்வு பெற்ற தொகை மற்றும் சிறுக, சிறுக சேமித்து வைத்த தொகையை நூதன முறையில் கொள்ளையடித்த நபர்களிடமிருந்து அந்த பணத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
1 Comments
Omg
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை