Ad Code

Responsive Advertisement

விரைவில் வெளியாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை

தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்குவெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில், பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டம், 12 ஆண்டுகளாக மாற்றப்படாததால், தமிழக மாணவர்கள், தேசிய அளவில், போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.
எனவே, பாடத் திட்டத்தை மாற்ற, தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையேற்ற தமிழக அரசு, ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான, பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில்,வல்லுனர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் பாடத்திட்டம்குறித்து, கருத்துக்கள்பெற்றுள்ளது.

தற்போது, பாடத்திட்டத்துக்கு முந்தைய, கலைத்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. ௬௦ பக்கங்களில் உருவான, அந்த அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் நடக்கின்றன.இந்த அறிக்கைப்படி, பாடத்திட்ட வரைவு அறிக்கையும் தயாராகிறது.காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், பாடத்திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு, அறிக்கை வெளியாகலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement