Ad Code

Responsive Advertisement

உத்தரவு பிறப்பிக்க புதிய 'மொபைல் ஆப்ஸ்' : கல்வித்துறையில் அறிமுகம்

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் 'குரல்' பதிவு மூலம் ஊழியர்களுக்கு  அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பிக்க புதிய மொபைல் ஆப்ஸ் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



கல்வித்துறையில் ஏராளமானதொழில்நுட்ப முறைகள் பயன்பாட்டில் உள்ளன. மாநில 

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் வழிகாட்டுதலில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 'வாய்ஸ் ஸ்னாப்' எனும் ஸ்மார்ட் போன்களில் (அலைபேசிகளில்) பயன்படுத்தப்படும் செயலி தற்போது கல்வித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்ட அளவிலான துறைஅதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் உதவி அதிகாரிகள், ஊழியர் களுக்கான உத்தரவை அலைபேசி மூலம் தெரிவித்து, பணி செய்ய அறிவுறுத்தலாம்.இதற்கான வழிவகைகளையும், பயன்பாட்டு முறைகளையும் ஆராய்ந்த அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணிக்கும் குழுவினர், கல்வித்துறையில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளனர்.நேற்று தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் 

'வாய்ஸ் ஸ்னாப்' செயலியை பயன்படுத்தி குரல் பதிவு மூலம், ஊழியர்களுக்கு 

அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலம் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும், கட்டாயம் இந்த 'வாய்ஸ் ஸ்னாப்' செயலியை பதிவேற்றம் 

செய்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் இந்த 'வாய்ஸ் ஸ்னாப்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் தங்கள் கட்டளைகள் அல்லது உத்தரவுகளை குரலாக பதிவு செய்து அனுப்பலாம். மேலும், ஊழியர்களின் அலைபேசி எண்களும் அரசு ஆவணங்களோடு பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட பிரிவுகளில் மாவட்ட அலுவலர்களோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்த செயலியில் அரசு ஊழியர்கள் தவிர பிற நபர்கள் இணைக்கப்பட வாய்ப்புக்கள் குறைவு. அதனால் அரசு விபரங்கள் வெளியில் தெரிய வும் வாய்ப்புக்கள் இல்லை. செயலி தனி மென்பொருள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement