தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, 3000 பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், கணினி வசதிகளுடன் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.