Ad Code

Responsive Advertisement

ஜெயலலிதா மரணம்! விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைபெற்று வந்த அவர் கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டில் அறிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணை கமிஷன் அறிவிப்பு நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.



இந்தநிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் நீதிபதி விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement