Ad Code

Responsive Advertisement

ஓர் கணினியின் கண்ணீர்....!


ஓர் கணினியின் கண்ணீர்.... ...
தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமனத்தின் போது பி.எட்., படித்த கணினி ஆசிரியர்களை மட்டுமே நிரப்ப வேண்டும்..!!

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி…

மேலும், அதற்காக தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கணினி ஆசிரியர்களுக்கு இச்செய்தி மகிழ்வை தந்தது; அடுத்த கணமே கணினி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அரசு பள்ளி *அறிவியல் ஆசிரியர்களுக்கு* கணினி பயிற்சி வழங்க முடிவு செய்தது 40,000 கணினி ஆசிரியர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் விதமாக அமைந்துள்ளது.

இது எந்த விதத்தில் நியாயம்..?? தமிழுக்கு-தமிழ் ஆசிரியர், ஆங்கிலத்திற்கு-ஆங்கில ஆசிரியர், கணிதத்திற்கு-கணித ஆசிரியர்… என மற்ற பாடங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது கணினி அறிவியலுக்கு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், அறிவியல் ஆசிரியர்களை நியமனம் செய்ய முயற்சிப்பது எந்த விதத்தில் சரியாகும்..??

அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம், என்ற கனவுகளுடன் கடன்பட்டு பி.எட்., படித்த 40,000-கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகளை சபித்துவிட்டது தமிழக அரசு.

*40,000 கணினி ஆசிரியர்கள் வாழ்வில் கண்ணீர் தந்த செய்தி:*

இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அறிவியல் பாடத்துடன் தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.


*தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை…*

மற்ற பாட ஆசிரியர்களுக்கு இல்லாத ஓர் உயரிய நிலை கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டு தமிழகத்தில்…

"கடந்த இரண்டு, மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும்” என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன... இதில், ஆளும் அரசும் அடக்கம். 

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39,019 (as on 31-12-2016 RTI Report) பேர் இப்போது பி.எட்., படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில் தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

மொத்தமாக 39,019 பேரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் 63 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த பலனும் இல்லை. பள்ளிக்கல்வித் துறையிலும் பலமுறை மனு அளித்துள்ளோம். இது *”அரசின் கொள்கைமுடிவு”* என்று கூறிவிட்டு புறக்கணித்துவிடுகிறார்கள். 

எங்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா என்றால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. 

தற்போது இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எங்களின் நிலையை விளக்கி 36-முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைவருக்கும் மனு கொடுத்தும் இன்று பயினல்லா நிலைக்கு எங்கள் வாழ்வு தள்ளப்படும் நிலையில் உள்ளது.

இதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா..??

மற்ற பாட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தந்து கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால், அரசின் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் (TNTEU) எதற்காக கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட்..?? 

40,000 கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த சோகத்தில் B.E., படித்தவர்களுக்கு பி.எட்., அங்கீகாரம் கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

(குறிப்பு : B.E., பாடத்தில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருந்தாலும் கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்கள் மட்டும் தான் இதனை பயில முடியும் என்பது கூடுதல் சிறப்பு). 

40,000 கணினி ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் கூட பணியாற்ற, தகுதியற்ற நிலைக்குக் கொண்டு சென்றதுதான் தமிழக அரசின் சாதனையா..?? இல்லை அரசின் கொள்கை முடிவா..??

*_கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., படித்தவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு சலுகைகள்…._*

* தனியார் பள்ளிகளில் கூட பணி வாய்ப்புகள் இல்லை.

* ரூ.7000/- சம்பளம் வாங்கும் சிறப்பு/பகுதி நேர ஆசிரியர் பணி கூட மறுக்கப்பட்ட அவலம்.

* ஆசிரியர்கள் தேர்வில் (TET, TRB) கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு.

* AEEO, DEO தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளோம்.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்திற்கு, பி.எட்., கணினி ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்!! 

வெ. குமரேசன்,
மாநில பொதுச் செயலாளர்,
*9626545446*
*தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*பதிவு எண் ®655/2014.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement