அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, 'டிஜிட்டல்' விபர பதிவு அமலுக்கு வருகிறது.  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணிய...