Ad Code

Responsive Advertisement

தினசரி விலை ஏறும் பெட்ரோல்... என்னதான் நடக்கிறது?

`பிக் பாஸ்' பற்றிச் சிந்திக்கும் நாம், பெட்ரோல் விலை தினமும் ஏறுவதைப் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
முன்பெல்லாம் மாதக்கணக்கில் விலையேற்றம் செய்தனர். பிறகு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை. பிறகு, வாரத்துக்கு ஒருமுறை. இப்போது தினசரி! ‘100 ரூபாய்க்கு போடுங்க பாஸ்’ என்று பைக் டேங்க்கைத் திறந்து மூடிவிட்டுக் கிளம்பும் உங்களில் எத்தனை பேர் பில்லைக் கேட்டு வாங்கி ‘‘என்னங்க... நேத்து 1.43 வந்தது. இன்னிக்கு 1.42 லிட்டர்தான் வந்திருக்கு?’’ என்று கேட்டிருக்கிறீர்கள்? அங்கேதான் பெட்ரோலியத் துறையின் சூட்சுமம் இருக்கிறது.
petrol
`மொத்தமாக விலை ஏற்றினால்தான் பிரச்னை. தினமும் பைசாக்கணக்கில் கூட்டினால் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்’ என்கிற மத்திய அரசின் ஃபார்முலா சிறப்பாக வொர்க்-அவுட் ஆகிக்கொண்டிருக்கிறது. இப்படியேபோனால், ‘அடுத்த ஜனவரியில் புதிய இந்தியா பிறக்கப்போகிறது’ என்று பிரதமர் சொன்னதுபோல், புதிதாக 100 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் தொடங்கி புதிய ஜனவரி ஆரம்பிக்கப்பட்டுவிடலாம். 
கடந்த இரண்டு மாதங்களாக தினசரி ஏற்றம் கண்டிருக்கும் பெட்ரோல் விலையை, நீங்களே பாருங்கள்... (ஒரு லிட்டருக்கு)
தேதிவிலை   (ரூ)
18,  ஆகஸ்ட் 2017  70.76
17,  ஆகஸ்ட் 2017          70.70
16,  ஆகஸ்ட் 2017  70.59
14,  ஆகஸ்ட் 2017            70.44
11,  ஆகஸ்ட் 2017             69.68
10,  ஆகஸ்ட் 2017     69.35
9, ஆகஸ்ட் 201769.20
8, ஆகஸ்ட் 201769.13
7, ஆகஸ்ட் 201769.08
4, ஆகஸ்ட் 201768.34
2, ஆகஸ்ட் 201767.78
1, ஆகஸ்ட் 201767.76
31,   ஜூலை 2017                67.78
28,   ஜூலை 2017                67.18
27, ஜூலை 201767.07
26, ஜூலை 201767.06
25, ஜூலை 201767.10
24, ஜூலை 201767.06
21, ஜூலை 201766.75
20, ஜூலை 201766.77
19, ஜூலை 201766.72
18, ஜூலை 201766.67
17,   ஜூலை 2017                66.66
14, ஜூலை 201766.34
13, ஜூலை 201766.36
12, ஜூலை 201766.43
11, ஜூலை 201766.38
10,   ஜூலை 2017                66.29
7, ஜூலை 201765.72
6, ஜூலை 201765.58
5, ஜூலை 201765.50
4, ஜூலை 201765.46
3, ஜூலை 201765.50
‘‘பெட்ரோல் விலையைக் கவனிச்சீங்களா?’’ என்று பெட்ரோல் பங்க்கில் 100 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்த சிலரிடம் கேட்டோம்... 
petrol‘‘ என்ன சார் பண்றது? என் ஸ்கூட்டிக்கு ரெண்டு நாளைக்கு ஒருதடவை 100 ரூபாய்க்கு பெட்ரால் போடுறேன். பில்கூட வாங்குறதில்லை. நீங்க சொல்லித்தான் டெய்லி விலை ஏறினதே எனக்குத் தெரியும்!’’ என்றார். 
``நான் நோட் பண்ணிக்கிட்டுத்தாங்க வர்றேன். நான் எப்பவும் ஸ்பீடு பெட்ரோல்தான் போடுவேன். `இன்ஜினுக்கும் வண்டிக்கும் நல்லது'ன்னு சொன்னாங்க. இப்போ ஸ்பீடு பெட்ரோலோட விலை 74 ரூபாய்க்கு வந்து நிக்குது. இன்ஜினும் வண்டியும் நல்லா இருக்கும்... நான் நல்லா இருக்க மாட்டேன்போல!’’ என்றார் வில்லிவாக்கத்தில் வசிக்கும் சுந்தர்.
‘‘கவுண்டமணி சொல்வாரே.. `இனிமே க்ரூடு ஆயில்லதான் வண்டி ஓட்டணும்'னு, அதுமாதிரி யாராவது க்ரூடு ஆயில்ல ஓடுற பைக் கண்டுபிடிச்சா சொல்லுங்க!’’ என்றார் நிஷாந்த்.
‘‘உண்மையில், பெட்ரோல் விஷயத்தில் என்னதான் நடக்கிறது?’’ என்று தமிழ்நாடு பெட்ரோல் டீலர் அசோஷியேஷன் தலைவர் முரளியிடம் கேட்டோம்.
``இப்படி தினமும் விலைவாசி ஏற்றுவது வெளிநாட்டு ஸ்டைல். வெளிநாடுகளில் எப்படியென்றால், அன்றன்றைக்கு விற்கபடும் கச்சா எண்ணெயின் நிலவரப்படி பெட்ரோல் விலையை ஆயில் கம்பெனிகள் நிர்ணயிக்கும். அதே முறையைத்தான் இப்போது இந்தியாவில் பின்பற்றுகிறார்கள். தங்கம் விலைபோல் கச்சா எண்ணெயின் விலை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த அடிப்படையில்தான் நம் ஊரிலும் பெட்ரோல் நிர்ணயம் செய்ய வேண்டும் என எங்களுக்கு ஆயில் கம்பெனிகள் மூலம் வந்த கட்டளை!’’ என்றார்.
‘மத்திய அரசே... ஏன்யா இப்படிப் பண்றீங்க?’ என்று தலையில் அடித்துக்கொண்டால், ‘கச்சா எண்ணெய் இறக்குமதி... ஜி.எஸ்.டி’ என்று ‘நீட்’ தேர்வு வினாத் தாளைப்போல் புரியாத பாஷையில் பேசி விழி பிதுங்கவைக்கிறார்கள்.  `அப்பாடா... பெட்ரோலிலாவது ஜி.எஸ்.டி-யைத் திணிக்காம இருக்காங்களே!' என ஆசுவாசமடைந்தால், அங்கேதான் `அட கிறுக்குப் பயபுள்ள' என்று சிவாஜிபோல் நம்மை நாமே திட்டிக்கொள்ளத் தோன்றுகிறது. 
petrol
ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகிதத்துக்குமேல் வரி விதிக்க முடியாது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுங்கவரி 23 சதவிகிதம், மாநில அரசின் வாட் வரி 34 சதவிகிதம். ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகிவிடும். இப்போது புரிகிறதா தந்திரம்?
நான்கு பேர்கொண்ட குழு அமைத்து, இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க மெனக்கெடவேண்டியதில்லை பாஸ். நறுக்கென ஒரு விஷயம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சில்லறையாக நாம் கொடுக்கும் 70 ரூபாயில், ஏறத்தாழ 40 சதவிகிதம் மட்டுமே கச்சா எண்ணெயின் விலை. மீதி இருக்கும் 60 சதவிகிதம், உற்பத்திச் செலவு, இந்தியாவில் விதிக்கப்படும் கலால்வரி, சுங்கவரி, விற்பனைவரி போன்றவற்றுக்கே சென்றுவிடுகிறதாம். இந்த வரி முறையில் மாற்றம் கொண்டுவந்தால், விலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம் என்பது படிக்காதவர்களுக்கே தெரிந்த விஷயம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement