Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களே 7வது சம்பள கமிஷன் தான் கடைசி.. அடுத்த ஆண்டு முதல் வருடந்தோறும் ஊதிய உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் தான் கடைசிப் பே கமிஷனாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் சம்பள கமிஷனுக்குப் பதிலாகப் புதிய முறை அறிமுகம் ஆக உள்ளது. வரும் ஆண்டு முதல் சம்பள கமிஷன் இல்லை என்பதை நிதி அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. சம்பள கமிஷன் ஒன்றை அமைத்து 10 வருடத்திற்கு ஒரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிப்பதற்குப் பதிலாக வருடந்தோறும் ஊதிய உயர்வு அளிக்கும் முறையைத் துவங்க உள்ளது.


எப்படி அரசு ஊழியர்களின் சம்பளங்கள் மாற்றி மதிப்பாய்வு செய்யப்படும்? மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இனி வருடந்தோறும் தனியார் ஊழியர்களைப் போன்று மதிப்பாய்வு செய்யப்படும். எனவே இனி மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கமிஷனுக்காக 10 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே கொடுப்பனுவுகளை எளிதாக மாற்றி அளிக்கப்படும். மத்திய ரசு ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கத்தினை வைத்துச் சம்பளத்தினை மதிப்பாய்வு செய்யும்.

ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு 
அக்ரோரிட் சூத்திரம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்யும் போது அரசாங்கம் அக்ரோரிட் சூத்திரத்தை கருத்தில் கொள்ளும். இந்தச் சூத்திரம் ஒரு பொதுவான மனிதனின் அன்றாடச் செலவுகள் எப்படி அதிகரித்துள்ளதோ அதைப் பொருத்துச் செயல்படும்.

10 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை மத்திய அரசு ஊழியர்கள்சம்பள உயர்வுக்காகப் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பின்னர் அரசாங்கம் ஊதியக் கமிஷன்களை ரத்துச் செய்ய முடிவு செய்தால், இனி பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் சம்பளம் திருத்தம் பணவீக்கத்தைச் சார்ந்தது. இது ஓய்வூதிய காரணிக்கும் பொருந்தும். 7 வது சம்பள கமிஷனை உருவாக்குவதற்கான முடிவு கடைசியாக மத்திய அரசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்? காலம் பதில் சொல்லும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement