தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் பணியில் காணப்பட்ட குறைபாடுகள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை சேகரிக்கவேண்டும். தொகுப்பு அறிக்கை தயாரிக்கும்போது தமிழ்நாடு குடிமுறைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17, 17அ, 17ஆ, 17இ-யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரங்களும் பணியில் ஒழுங்கீனம் காரணமாக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களும் சேகரிக்க வேண்டும்.
எவ்வித விவரங்களும் விடுபடாமல், தனித்தனியாக மாவட்ட அளவில் தொகுத்து 2012-2013 முதல் 2016-2017ம் ஆண்டுகளின் விவரங்களை சேகரித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த அறிக்கை எவ்வளவு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும், இதன்மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை