Ad Code

Responsive Advertisement

கல்லூரிகளில் ஆக., 4 வரை 'அட்மிஷன்' : சென்னை பல்கலை உத்தரவு

சென்னை பல்கலையின் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 4 வரை, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்' என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலையின் தேர்வுத் துறையில், துணை தேர்வு தாமதமாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதோர், உடனடி துணை தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதன் முடிவு வருவதற்குள், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விடுவதாக, மாணவர்கள் புலம்பினர்.

இது குறித்து, சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சீனிவாசன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளுக்கான தேர்வுகளில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 2010 முதல், உடனடி துணை தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலையில், இறுதி பருவத் தேர்வில், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும், இதில் பங்கேற்கலாம். ஆண்டுதோறும், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், துணை தேர்வு நடக்கும். இந்த ஆண்டு, ஜூலை, 29ல், துணை தேர்வுநடந்தது.

 இதில், 1,080 பேர் பங்கேற்றனர்; இதன் முடிவு,இன்று வெளியாகிறது. எனவே, துணை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, உயர் கல்வியில் சேர, ஆக., 4 வரை,விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம். காலியிடங்கள் இருந்தால், கல்லுாரிகளும், சென்னை பல்கலையின் துறைகளும் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement