Ad Code

Responsive Advertisement

மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு! #VidyarthiVigyanManthan

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புஉணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் இணையவழியில் நடைபெறும். இளம் விஞ்ஞானிகளைத் தேடும் தேர்வு. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் இத்தேர்வை எழுதலாம். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும் எழுதலாம்.

இந்தத் தேர்வு குறித்து வித்யார்த்தி விஞ்ஞான் மந்தனின் மாநில ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரானிடம் பேசினோம். "பள்ளி 

 மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக நிச்சயம் இருக்கும்.  ஆறாவது வருடமாக இந்தத் தேர்வு இந்தாண்டு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடம் உரையாடுவதற்கும் அவர்களுடன் சில செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருகிறது. ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்கிற நிலையை இப்போது பிராந்திய மொழிகளில் எழுதும் விதமாக மாற்றியிருக்கிறோம். அதனால் சென்ற ஆண்டு தேர்வு எழுதிய 10 ஆயிரம் பேரில் சுமார் 4,500 பேர் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள். இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று நம்புகிறோம்.

இந்தத் தேர்வை சுலபமாக ஆன்லைனில் எழுதலாம். v v m app ஐ டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன் அதை அப்டேட் செய்தால் போதும். தேர்வன்று கேள்வித்தாள், குறிப்பிட்ட நேரத்தில் ஓப்பனாகும். அதில் பதிலைத் தேர்ந்தெடுத்தால் போதும். இதை ஸ்மார்ட் போனிலிருந்தே செய்துவிடலாம்." என்கிறார். 
science
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: 6 முதல் 11 வகுப்பு  வரை உள்ள மாணவர்கள் பங்குபெறலாம். 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவும் 9 முதல் 11 வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளி வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.vvm.org.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.100. 
பள்ளி வழியாகத் தேர்வு எழுத முடியாதவர்கள் தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள் 9942467764 என்ற வாட்சப் எண் மற்றும் vvmtamilnadu@gmail.com என்ற இ மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

 நடைபெறும் முறை:  தேர்வு இணையவழியில் நடைபெறும் ஸ்மார்ட் போன், டேப்லட், மடிக்கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தேர்வு எழுதலாம்.மாணாக்கர்களிடம் அவர்களின் பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானது. VVM செயலி மூலம் தேர்வு எழுதலாம். மாணாக்கர்கள் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம். தேர்வுக்கு முன்னர் 5 க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணாக்கர்கள் வார இறுதி நாள்களில் அவற்றை எழுதி பார்க்கலாம்.
பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்: மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் கீழ்வரும் பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். (வகுப்பு எனக் குறிப்பிடுவது 6, 6,8,9,10,11 ஆகியவற்றை)
பள்ளி அளவில்: பள்ளியில் ஒரு வகுப்புக்குக் குறைந்தபட்சம் 10 மாணவர்கள் பங்கேற்றால் வகுப்புக்கு 3 மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில்: மாவட்ட அளவில் (6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்புக்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட மண்டல அளவில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். 

மாநில அளவில்: மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும். இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். 120 மாணவர்களில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு,

ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும். தேசிய அளவிலான ஓர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாநில அளவில் தேர்வு பெறும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

தேசிய அளவில்:  ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள். தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.25000, ரூ.15000, ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும்.  தேசிய மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துகளைத் தெரிந்துகொள்ள வழிகாட்டப்படுவார்கள்.
நாள்கள்: 
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:  20-09-2017.(செப்டம்பர் 20,2017)
தேர்வு நடைபெறும் நாள்   :   26-11-2017 ( நவம்பர் 26, 2017 )

மேலும் தகவல்களுக்கு  www.vvm.org.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். Email : vvmtamilnadu@gmail.com

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement