Ad Code

Responsive Advertisement

TRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்டுக்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.

தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அரசுப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள், இதுவரை வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் நிரப்பப் பட்டு வந்தன. தற்போது முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக அப்பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 327 ஓவிய ஆசிரியர், 663 உடற்கல்வி ஆசிரியர், 86 இசை ஆசிரியர், 248 தையல் ஆசிரியர் (மொத்த காலியிடம் 1,325) பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற இருக் கிறது. இத்தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தை (www.trb.nic.in) பயன்படுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண் ணப்பிக்கவேண்டும் என்று அதன் தலைவர் டி.ஜெகன்நாதன் அறிவித்துள்ளார்.

பதிவு மூப்புக்கு மதிப்பெண்

எழுத்துத்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் பணி நியமனம் நடக் கும். எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலை வாய்ப்பு பதிவுமூப்புக்கு அதிக பட்சம் 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு பதவிக்கும் நிர்ணயிக் கப்பட்டுள்ள கல்வித்தகுதி, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை முதலான விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச் சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப் பின்போது பதிவுமூப்புக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். இறுதியாக, எழுத் துத்தேர்வு மதிப்பெண், வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படை யில் சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


பதிவுமூப்பு ஆண்டுக்கான மதிப்பெண் விவரம் வருமாறு:-


1 முதல் 3 ஆண்டுகள் வரை- 1 மதிப்பெண்

3 முதல் 5 ஆண்டுகள் வரை- 2 மதிப்பெண்

5 முதல் 10 ஆண்டுகள் வரை- 3 மதிப்பெண்

10 ஆண்டுகளுக்கு மேல்- 5 மதிப்பெண்

3 லட்சம் பேர் விண்ணப்பிப்பர்

பதிவுமூப்பு ஓராண்டுக்குள் இருந்தால் அதற்கு மதிப்பெண் எதுவும் அளிக்கப்படாது.சிறப்பாசிரியர் தேர்வுக்கு ஏறத்தாழ 3 லட்சம் பேர் விண்ணப்பிக்கக்கூடும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement