Ad Code

Responsive Advertisement

SMART CARD - ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய... இருக்கவே இருக்கு 1967! வரிசையில் காத்திருக்க வேண்டாம்

ரேஷன் கார்டு மட்டுமல்ல...வழங்கல் துறையும் படிப்படியாக 'ஸ்மார்ட்' ஆக மாறி வருகிறது. இனி, ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற, தாலுகா அலுவலகங்களில் கால்கடுக்க காத்து நிற்க தேவையில்லை. கையில் ஒரு ஆன்டிராய்டு மொபைல் போன் இருந்தால் போதும்; 1967 என்ற எண்ணை அழுத்தி, இருந்த இடத்தில் இருந்தே வேலையை கச்சிதமாக முடித்து விடலாம்.


ஆம்...! மொபைல் போன் நிறுவனங்களில் உள்ளதை போன்று, வாடிக்கையாளருக்கு சேவையளிப்பதற்காக, 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் வகையில், தானியங்கி மொபைல் சேவை மையத்தை உணவு வழங்கல் துறை உருவாக்கியுள்ளது. இச்சேவை மையம், தமிழகம் முழுக்க உள்ள, ரேஷன்கார்டுதாரர்களின் புகார்களை பெற்று, உடனுக்குடன் சரிசெய்து கொடுக்கிறது.

ரேஷன்கடையில் பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்திருப்பார்கள், குடும்பத்தலைவரின் போட்டோவை கொடுத்திருக்க மாட்டார்கள் அல்லது தெளிவான போட்டோவை கொடுத்திருக்க மாட்டார்கள். அதனால் பலருக்கு 'ஸ்மார்ட் கார்டு' இன்னும் கிடைக்கவில்லை.

போட்டோவை நாம் ரேஷன்கடையில், சமர்ப்பிக்க வேண்டுமென்றால், போட்டோவை 'மொபைல் ஆப்' மூலமாகவோ., அல்லது TNEPDS என்ற இணையதளம் மூலமாகவோ மட்டுமே, 'அப்லோடு' செய்ய முடியும். அதன்பின்பு தான் 'ஸ்மார்ட் கார்டு' பிரிண்ட் செய்வார்கள். TNEPDS என்ற இணையதளம் வாயிலாக, 'போட்டோவை' எளிதாக 'அப்லோடு' செய்யலாம்.

அதன் பின், அதை 'பிரிண்ட் அவுட்' எடுத்து ரேஷன்கடையில் சமர்ப்பிக்கலாம். இதே இணையதளத்தில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பெயர் சேர்ப்பு, கடை மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளையும், இதே போன்று இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் வசதி, விரைவில் வரவுள்ளது.

தற்போது இ-சேவை மையங்களில் இச்சேவைகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டு விட்டன.

இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி கூறியதாவது:

உணவு வழங்கல் துறை, பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. தனியாருக்கு இணையாக இணையதள சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். படிக்காதவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. அவர்களை தவிர்த்து மற்றவர்கள், இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களும், உணவுப்பொருள் வழங்கல் துறையில் என்னென்ன வசதிகள் உள்ளன, என்பதை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.

tnepds.gov.in என்ற வெப்சைட்டில் நுழைந்தால், அதில் உள்ள பல்வேறு வசதிகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம். முடிந்தால், அதிலுள்ள செயலியை (ஆப்) உங்கள் மொபைல் போனில் டவுண்லோடு செய்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்..

இதன் வாயிலாக, வீட்டில் இருந்து கொண்டே, ரேஷன்கடையிலுள்ள இருப்பை தெரிந்து கொள்ளலாம். கடைக்கு சென்றால் பொருட்கள் கிடைக்குமா, கடை திறந்திருக்கிறதா என்ற தகவல்களை கூட, நாம் தெரிந்து கொள்ளலாம். இச்செயலியை பயன்படுத்திய பலரும், மிகவும் உபயோகமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, சரவணமூர்த்தி கூறினார்.


இப்படித்தான் சாத்தியம்!
1967 என்ற எண்ணை, மொபைல் போன் அல்லது தொலைபேசி வாயிலாக, 'டயல்' செய்தால், 'தமிழுக்கு ஒன்றை அழுத்தவும்' என்ற பதில் கிடைக்கும். அதன்படி அழுத்தினால், 'குடும்ப அட்டை வைத்திருப்பவரா' என்ற அடுத்த கேள்விக்கு, எண், 2 ஐ அழுத்த வேண்டும்.

சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார். அவர் ரேஷன்கார்டின் வலது பக்கத்தின், மேற்பகுதியிலுள்ள எண்ணை கேட்பார். உதாரணத்திற்கு, 006/w/33658889 என்ற எண்ணை நாம் தெரிவித்தால், ரேஷன்கார்டிலுள்ள, ஒருவரின் ஆதார் எண்ணை, அவர் கேட்பார். ஆதார் எண்ணை தெரிவித்தால், நம் ரேஷன்கார்டில் நமக்கு தேவையான, மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

அல்லது ஏற்கனவே பதிவில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு பதிலாக, வேறு
எண்ணையும் மாற்றிக்கொள்ளலாம். இவ்வளவுதான் வேலை. இதற்காக, ரேஷன் கடையிலோ, உணவுபொருள் வழங்கல் துறை அலுவலகத்திலோ வேலைமெனக்கெட்டு காத்திருக்க வேண்டியதில்லை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement