Ad Code

Responsive Advertisement

Kaizala வாட்ஸ்ஆப் க்கு போட்டியா புதுசா கைசாலா (Kaizala) எனும் ஆப்ஸ்சை மைக்ரோ சாப்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. இன்ஸ்ட்டால் பண்ணி யூஸ் பண்ணிப்பாக்கலாமே..




CLICK HERE TO DOWNLOAD...

வாட்ஸ்ஆப் க்கு போட்டியா புதுசா கைசாலா (Kaizala) எனும்  ஆப்ஸ்சை  மைக்ரோ சாப்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுல என்ன ஸ்பெஷாலிட்டின்னா வாட்ஸ்ஆப்ல ஒரு க்ரூப்ல 256 பேருக்கு மேல சேர்க்கமுடியாது. ஆனா இதுல எத்தனை பேர் வேண்டுமானாலும் சேத்துக்கலாம். அன்லிமிடெட்

கைசாலா ஆப்ஸ்சில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும்னு சொல்லப்படுது. கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்கு மென்ட்களை உருவாக்க முடியும்னு சொல்றாங்க. இந்த வசதி  இருக்கறதால தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை இதன் மூலம்  தெரிந்து கொள்ளலாம்.

ஆந்திராவில் பெரும்பாலான அரசு துறைகள் இந்த ஆப்சை தற்போது பயன்படுத்தி வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆப்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மெசேஜ் அனுப்பி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கேட்டு வருகிறாராம். (தமிழக முதல்வர் எடப்பாடியார் கவனிக்க)

கைசாலா (Kaizala) ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்து பேசவும் முடியுதாம். இந்த வசதி வாட்ஸ்ஆப்ல இருக்கறதா தெரியலே..

இந்த ஆப்ஸ்ல, வாட்ஸ்ஆப்ல இல்லாத கூடுதல் ஸ்பெஷாலிட்டி என்னென்னா,  கைசாலா ஆப்ஸ் யூஸ் பண்றவங்க, வணிக வளாகம் உள்ளே நடந்து போகும்போது, தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை தங்களுடைய மொபைல்களிலேயே பெற முடியுமாம்.

அறிமுகமான சில மாதங்களிலேயே நாடு முழுவதும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட அரசு துறைகள், அரசு துறைகளைச் சேர்ந்த 70,000 க்கும் மேற்பட்டோர் இந்த கைசாலா ஆப்ஸ் ஐ பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களாம்..

இந்த கைசாலா ஆப்ஸ் எனும் செயலி ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கு..

இன்ஸ்ட்டால் பண்ணி யூஸ் பண்ணிப்பாக்கலாமே..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement