Ad Code

Responsive Advertisement

*JACTTO-GEO பேரணியும்!* *CPS e-mail தன்னெழுச்சியும்!!*

 மின்துறை ஊழியர்கள் 20 ஆண்டு காலமாகப் போராடி - வாதாடி இன்று ஓய்வூதியத்தை  உறுதி செய்துள்ளனர்.

ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் 25 ஆண்டு காலமாகப் போராடி - வாதாடி பணியிலில்லா காலத்திற்கும் ஊதியத்தை உறுதி செய்துள்ளனர்.

இவ்விரண்டிலும் மேலான - பலமான - தளர்வில்லாத் தொடர் போர்க்குணமே நமக்கான ஓய்வூதியத்தைப் பெற வழிவகுக்கும்.

14 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை உரிமை வேட்கையுள்ள அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்கள் தனித்தும் இணைந்தும் நடத்தி வந்துள்ளன.

இறுதியாக பிப்ரவரி 2016-ல்  நடத்திய வலுவான காலவரையற்ற வேலைநிறுத்தம் 14 ஆண்டுகால CPS ஒழிப்புப் போராட்ட வரலாற்றின் முதல் ஆக்கப்பூர்வ அதிர்வலையை ஆளும் தரப்பில் ஏற்படுத்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வல்லுந‌ர் குழுவை அமைக்க வைத்தது. 26.2.2016-ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு 3 முறை காலநீட்டிப்பு பெற்றும், 16 மாதங்கள் முடிந்தும் இன்று வரை அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

இந்நிலையில் இக்கோரிக்கைக்காவும் JACTTO-GEO நடத்தி முடித்துள்ள கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 5-ல் நடைபெறவுள்ள சென்னைப் பேரணியும் CPS ஒழிப்பிற்கான அடுத்த அதிர்வலையை ஆளும் தரப்பிடம் உறுதியாக ஏற்படுத்தும்.

இந்த 16 மாத இடைவெளியில் நடைபெற்ற ஒரு சில வலிமையான போராட்டங்களில் அரசு தரப்பு வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றே காரணம் கூறியது. இதே காரணத்தை எதிர்வரும் சென்னைப் பேரணியைத் தொடர்ந்தும் அரசு தரப்பு கூறாமலிருக்க வேண்டுமெனில், வல்லுநர் குழுவிற்கும் அறிக்கை சமர்ப்பிக்க அழுத்தம் கொடுத்தாக வேண்டிய கட்டாயச் சூழலை உணர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தன்னெழுச்சியாக வல்லுநர் குழுவினருக்குத் தொடர் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

போர்க்களத்தின் பன்முனைத் தாக்குதலை ஒத்த JACTTO-GEO-வின் சென்னைப் பேரணியும், CPS வல்லுநர் குழு அறிக்கை வேண்டி நாள்தோறும் மின்னஞ்சல் அனுப்பும் தன்னெழுச்சிப் போராட்டமும் ஒருவேளை இறுதி வெற்றியை நமக்குப் பெற்றுத் தராவிட்டாலும், அரசு தரப்பில் ஆக்கப்பூர்வ அடுத்தகட்ட அதிர்வலைக்கு வித்திடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

('அப்டீனா உடனே வெற்றி வராதா?' எனச் சலிப்புறுவோர் மீண்டும் ஒருமுறை முதல் 3 பத்திகளை வாசிக்கவும்)

இனியும் ஆளுக்கொரு சாக்கும், நாளுக்கொரு போக்குமாக இல்லாமல் கனிந்து வந்துள்ள ஒன்றுபட்ட போராட்டக் களச்சூழலை இலக்கு நோக்கி நகர்த்திட

*நாள்தோறும் மின்னஞ்சல் அனுப்பும் CPS தன்னெழுச்சிப் போராட்டத்திலும்,*

*ஆகஸ்ட் 5-ல் நடைபெறவுள்ள JACTTO-GEOவின் சென்னைப் பேரணியிலும்,*

*உரிமை மீட்கும் வேட்கையோடே*
*உடன் இருப்போம் இறுதிவரை!*

*உரிமை வேட்கை உறுதியானால்,*

*உரிமை மீட்பும் இறுதியாகும்!!*

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement