Ad Code

Responsive Advertisement

IQ தேர்வில், 162 புள்ளிகள்.... புத்திசாலிகள் க்ளப்பில் உறுப்பினரானார் இந்திய சிறுவன்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் IQ அளவு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவைவிட இரண்டு புள்ளிகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
arnav sharma

தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் 11 வயது சிறுவன் அர்னவ் சர்மா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கடந்த வாரம் ’Mensa test’என்னும்
IQ அளவை சோதிக்கும் தேர்வை அர்னவ் எதிர்கொண்டுள்ளார். மிகவும் கடினமான இந்த IQ தேர்வை எழுதுவதற்கு முன்னர், அர்னவ் எதுவும் படிக்கவில்லையாம். மேலும், எந்தப் பதற்றமுமின்றி தேர்வை எதிர்கொண்டுள்ளார் அர்னவ்.

இந்தத் தேர்வில் வெற்றிபெற்று, புத்திசாலி என்னும் பெயரை வாங்கி மென்சா க்ளப்பில் இணைய 130 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். உலகம் முழுவதும் நடத்தப்பட்ட மென்சா IQ தேர்வில், தற்போதுவரை 20,000 பேர் மட்டுமே 130-க்கு மேல் பெற்றுள்ளனர். அவர்களில் 1,500 பேர் மட்டுமே 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

இந்நிலையில், இந்த முறை நடத்தப்பட்ட IQ தேர்வில், 162 புள்ளிகள் பெற்று மென்சா புத்திசாலிகள் க்ளப்பில் உறுப்பினராகி உள்ளார் அர்னவ். இந்த ஸ்கோர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவை விட இரண்டு புள்ளிகள் அதிகம். அவர்கள் பெற்றது 160 தானாம்.
இதற்கு முன்னர், இதே மென்சா IQ தேர்வை எதிர்கொண்ட இந்திய வம்சாவளிச் சிறுவன் 12 வயது ராஜ் கெளரி பவார், 162 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement