Ad Code

Responsive Advertisement

ஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி

ஆன்லைன் படிப்புகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.


'ஆன்லைன்' படிப்பிற்கு,ஆதார்,கட்டாயம் ,முறைகேட்டைதடுக்க, மத்தியஅரசு,அதிரடி மத்திய அரசு சார்பில், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., கல்லுாரிகளிலும், மற்ற பல்கலைகளிலும், ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அதே நேரம், ஆன்லைன் படிப்புகளில், ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதையடுத்து, மத்திய அரசின், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், கல்லுாரிகள், பல்கலை கள் போன்றவற்றில், ஆன்லைன் படிப்புகளை துவங்கும் முறை, பயிற்சி யாளர்களின் நியமனம், கல்லுாரிகளுக்கு தேவையான தொழிற் நுட்பம் போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:


* அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஆன்லைன் படிப்பில் சேர, மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.ஆதார் தகவல்படி, தேர்வின் போது, மாணவர்களின் கைரேகை மற்றும் புகைப்படம் ஆய்வு செய்யப்படும்.


* தேர்வின் போது, ஆன்லைன் மூலம், வீடியோ எடுக்கப்பட்டு, அவற்றை, 10 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.இந்த வரைவு
விதிகள் குறித்து, கல்லுாரிகள் ,பல்கலைகள் தங்கள் கருத்துக்களை , ஆலோசனைகளையும், ugc.online20l7@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, ஆக., 31க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement