Ad Code

Responsive Advertisement

திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் கண்காணிப்பு கேமரா வசதி

மாணவர் பாதுகாப்புகருதி, திருப்பூர் மாநகராட்சி பள்ளியில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக பெண்கள் பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. 

திருப்பூரில், ஏழு மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதில், பெரிய கடை வீதியில் உள்ள, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சமூகநல அமைப்புகள் சிலரின் உதவியோடு, முதற்கட்டமாக, பள்ளியின் முன்புற வாயில், வராண்டா, கொடிக்கம்பம், வகுப்பறை நுழைவாயில் என, நான்கு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

தலைமை ஆசிரியர், தன் அறையில் இருந்தவாறு கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளி என்பதால், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படுகிறது. 'பெற்றோர் உட்பட, பள்ளிக்கு வந்து செல்லும் அனைத்து நபர்களும், இதன் வாயிலாக கண்காணிக்கப்படுவர்' என்றனர்.இப்பள்ளியை போன்று, பிற அரசு பள்ளியிலும், தொண்டு அமைப்புகள் உதவியுடன், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான முயற்சியை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே, பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement