Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறன் சோதனை.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறன் சோதனை செய்யப்பட உள்ளன.அரசுப் பள்ளி மாணவர்களில், பெரும்பாலானோருக்கு வாசிக்க தெரியவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் அடைவுத்திறன் சோதிக்கப்படுகிறது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை வாசித்தல் மற்றும் எழுதுதல், கணிதத்தில் எளிய, கடின கணக்குகளை செய்தல் போன்றவை சோதிக்கப்படும். கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டது.

தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுதலின்றி சோதனை நடத்த வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு ஜூலை முதல் ஆகஸ்ட் 15 வரை மாவட்டத்தில் 50 சதவீத பள்ளிகளிலும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 15 வரை மீதமுள்ள 50 சதவீதம் பள்ளிகளிலும் நடத்தப்பட உள்ளது.

இதில், பின்தங்கும் மாணவர்களுக்கு வாசித்தல் எழுதும் திறனில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement