தங்களது பாதுகாப்பு முக்கியம் என்றால் பெண் ஊழியர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் இருந்து மாலை 6 மணிக்குள் கிளம்பிவிடுங்கள் என்று பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
லக்னௌவில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
லக்னௌவில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் பல்கலை வளாகத்துக்குள் எந்த காரணம் கொண்டும் பெண் ஊழியர்கள் இருக்கக் கூடாது என்றும், அவ்வாறு ஏதேனும் முக்கியப் பணிக்காக கூடுதல் நேரம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை வளாகத்துக்குள் பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்திருப்பதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
மேலும், உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்ங்கள் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது 15-17 சதவீதம் அதிகரித்திருக்கிறது. எனவே, பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக தங்கள் வீட்டுக்குச் சென்று சேரவும் இந்த அறிவுறுத்தல் உதவும் என்கிறார்.
பல்கலை வளாகத்துக்குள் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக பல பெண் ஊழியர்களிடம் இருந்து வந்த புகார் கடிதத்தைத் தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஆனால், இதனை கண்டித்துள்ள மாணவிகள், பல நேரங்களில் எங்கள் ஆய்வுப் பணிக்காக மாலை 6 மணிக்கு மேல் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தவறான வழிகாட்டல். இதற்குப் பெயர்தான் பெண் உரிமையா? என்கிறார்கள்.
பெண் ஊழியர்கள் சொல்வது என்னவென்றால், எங்களை 6 மணிக்குள் வெளியேறும்படி சொல்வதற்கு பதில் பல்கலைக்கழகம் முழுவதும் கண்காணிப்புக் கேமரா வைத்து பாதுகாப்பை அதிகரிப்பதே சிறந்த விஷயம் என்கிறார்கள்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை