Ad Code

Responsive Advertisement

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு: மத்திய அரசு



பான் எண்ணுடன் ஆதார் எண்ணை
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைத்த பிறகே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் எண் வைத்திருக்கும் ஏராளமானோர், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காததால், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement