Ad Code

Responsive Advertisement

7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. 

அக்குழு கடந்த ஜூன் 30-ம் தேதி அறிக்கைஅளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்காத நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புதிய ஊதியம் அமலாகுமா என்ற சந்தேகம் உள்ளது.

லோக்பால் சட்டப்படி தமிழகத் தில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. நாடாளு மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அங்கு சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தாவை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ''லோக்பால் சட்டத்தை அமல்படுத்த எந்தப்பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டுவர உள்ளது.

 திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், தமிழகத்தில் லோக்பால் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய வரையறையை நிர்ணயித்த மத்திய அரசு, படிகள் தொடர்பான தெளிவான வரையறையை அளிக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement