Ad Code

Responsive Advertisement

PGTRB : தமிழ் வழியில் ஆங்கிலம் குழப்புது TRB.,

'தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை' என்ற மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் 158 உள்ளன. இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஆக.,13ல் நடக்க உள்ளது. மேலும் ஜூலை 7க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள பணியிடங்களில் 20 சதவீதம் தமிழ் வழி முதுகலை படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடஒதுக்கீட்டு முறைக்கான அட்டவணையை டி.ஆர்.பி., நிர்வாகம் தனது www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது.

அதில், 'தமிழ் வழியில் எம்.ஏ., (முதுகலை) ஆங்கில இலக்கியம் படித்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' எனபட்டியலில் தெரிவித்துள்ளனர்.இதன்படி 88 பணியிடங்களில் 21 பணியிடங்களுக்கு இவ்வகையில் நியமனம் செய்ய உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கவனமின்மைக்கு இது ஒரு சான்று. தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படிக்க முடியாது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த அறிவிப்பில் தமிழ் வழியில் இளங்கலை படித்தோருக்கு முன்னுரிமை என வழிகாட்டியின் 2வது பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

ஆங்கில பாடத்தை எப்படி தமிழில் படிக்க இயலும். இதேபோல கடந்தாண்டில் முதுகலை தமிழ் ஆசிரியருக்கு எம்.ஏ., தமிழ் தகுதி எனக்கூறி, பின் பி.எட்., படிப்பும் தேவை என திருத்தம் வெளியிட்டனர், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement