நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத போது சிபிஎஸ்இ எப்படி நீட் தேர்வை நடத்த முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே உள்ள நடைமுறை போல நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் சேர்த்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த விடுமுறை கால நீதிமன்றம் இது குறித்து விளக்கமளிக்குமாறு, இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய, மாநில சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் மதிப்பெண்ணுடன் +2 மதிப்பெண்ணை சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏன் தாமதம்?
மேலும் +2 பொதுத் தேர்வு முடிந்த உடனேயே நீட் பொது நுழைவுத் தேர்வு நடத்தாதது ஏன்? 3 மாதங்கள் தாமதாமாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். நாடு முழுவதிலுமோ அல்லது மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிடையேயோ ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வது?
ஒரே கல்வி முறையில்லையே?
கிராம, நகரங்களில் கல்வித்தரம் வேறுபடும் போது மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ அடிப்படையில் ஏன் தேர்வு நடத்தப்பட்டது, கல்வித்தரம் வேறுபடும் போது சிபிஎஸ்இ வினாத்தாள் தயாரிப்பதை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டதோடு வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கும் நீதிபதிகள் மாற்றியுள்ளனர்.
அரசு அவகாசம்
இதனிடைய இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் திங்கட்கிழமை சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும் இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்களைத் தயார் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜூன்12ல் இறுதி முடிவு
நீட் தேர்வுக்கு தடை கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினமே தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை