Ad Code

Responsive Advertisement

Interactive Smart Board மூலம் அசத்தும் சொக்கனாவூர் அரசுப்பள்ளி!!





Interactive Smart Board மூலம் அசத்தும் சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,மதுக்கூர் ஒன்றியம்,தஞ்சாவூர் மாவட்டம்.
தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அரசுப்பள்ளிகளில் முதன்முறையாக மதுக்கூர் ஒன்றியம் சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் Interactive Board வுடன் கூடிய ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பு தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ரெங்கநாதன் அவர்களால், முன்னாள் மதுக்கூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.மூ.பழனிவேலு மற்றும் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் திரு.இளங்கோ அவர்கள் முன்னிலையில் 05.10.2016 ல் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பெ.பரமேஸ்வரி அவர்கள் என்றால் அது மிகையாகாது.
08.08.2016-ல் இப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியேற்ற அன்றே பள்ளியின் தரத்தை முன்னேற்றும் முயற்சியினை தம் கையில் எடுத்துக்கொண்டார். இப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் Techno Club செயல்பாடுகளில் சிறப்புடன் விளங்கியதால் அதனை முன்னெடுக்கும் விதமாக, மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Interactive board  உடன்கூடிய smart class ஐ தம் சொந்த செலவில் நிறுவியுள்ளார். மேலும் இவ்வகுப்பிற்கான UPS மற்றும் SPEAKER வசதிகளை இவ்வூரின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராமக்கல்வி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் , மேலும் சொக்கனாவூர் மற்றும் புளியக்குடி ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து தம் பங்களிப்பாக அளித்து பள்ளியின் வளர்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் துணை நிற்கிறார்கள். மேலும் 2016-17 ஆம் ஆண்டிற்கு மாணவர்களுக்குத் தேவையான stationery things and papers ஐ சென்னையை சார்ந்த AlfasofZ Solutions என்ற IT நிறுவனம் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இவ்வாண்டு மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க "RO" வசதியுடன் கூடிய குடிநீரை வழங்கவும் உறுதியளித்துள்ளனர்.
இப்பள்ளியின் ஆசிரியர்கள் திரு.க.பாலசுப்ரமணியன்,திருமதி.சா.சித்திக்காள்,
திருமதி.ரு.சாந்தி,
திருமதி.ஆ.சத்தியா,
திருமதி.ரா.சுயம்புகனி
திருமதி.ச.திவ்யா ஆகியோரைக்கொண்ட குழு மிகச்சிறப்பாக செயல்பட்டு, பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறமையை வளர்க்கும் விதமாக Phonetics முறையில் பாடங்களை நடத்துகின்றனர். தம்முடைய மாணவர்களின்  கற்றல் நிலைக்கேற்ப பாடத்தினை எளிமைப்படுத்தி அவற்றை படங்களுடன் கூடிய பாடமாக Powerpoint ல் அனிமேஷனுடன் தாமே உருவாக்கி smartclass ல்  கற்பிக்கின்றனர். மாணவர்களுக்கான செயல்திட்டங்கள், மனவரைபடங்களை கணினியில் வரையவும் பயிற்சியளிக்கின்றனர். இப்பள்ளியின் புதுமையான செயல்பாடுகளின் மூலம் ஈர்க்கப்பட்ட இவ்வூர் மக்கள்  தனியார்பள்ளியில் பயின்ற தம் குழந்தைகளை இப்பள்ளிக்கு மாற்றியுள்ளனர். ஆசிரியர் விடுப்பு எடுத்தாலும் கற்றல் தடையின்றி smart class மூலம் நடைபெறுவதால், மற்றுமொறு  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய projector ஐயும் தம் சொந்த செலவிலேயே வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள்....


Post a Comment

1 Comments

  1. https://www.facebook.com/pumschoolchokkanavur/

    Facebook page pums chokkanavur

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement