Ad Code

Responsive Advertisement

How to hide text messages on Android Smart Phone??

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மெசேஜ்களை மறைத்து வைப்பது எப்படி?


ஸ்மார்ட்போன்களில் சாட் செய்து கொண்டிருப்பது, நண்பர்களுக்கு பிடிக்காத ஒன்று.
‘அப்படி யாருடன் தான் மெசேஜ் செய்கிறாய்?’ என்ற கேள்வியுடன் ஸ்மார்ட்போனை பறித்து, அந்தரங்களை தெரிந்து கொள்வதில் நண்பர்கள் கில்லாடிகளாய் இருக்கின்றனர். இவ்வாறான நண்பர்களிடம் இருந்து தப்பிக்க சிலர் செயலியை லாக் செய்தும், பலர் பதில் அனுப்புவதையும் தவிர்த்து விடுவர்.
அந்த வகையில், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மெசேஜ்களை யாரும் பார்க்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

* செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்:
உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். புகைப்படம் மற்றும் வீடியோக்களை மறைத்து வைக்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வால்ட்-ஹைடு எஸ்எம்எஸ், பிக்ஸ், வீடியோஸ் (‘Vault-Hide SMS, Pics & Videos‘)
செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

* செயலியை செட்டப் செய்ய வேண்டும்:
இனி இன்ஸ்டால் செய்த செயலியை ஓபன் செய்து, ஸ்டார்ட் ஆப்ஷனில் பின் நம்பரை பதிவு செய்து, உங்களது கோரிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

* எஸ்எம்எஸ் காண்டாக்ட் ஆப்ஷன்:
இனி எஸ்எம்எஸ் மற்றும் காண்டாக்ட் ஆப்ஷனை கிளிக் செய்து மறைத்து வைக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்க்க முடியும். இனி மெசேஜ்களை மறைத்து வைக்க செயலியின் வலது பக்கம் இருக்கும் ‘+’ ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

* இம்போர்ட் செய்ய வேண்டும்:
முந்தைய ஆப்ஷனை கிளிக் செய்ததும் ஆட் காண்டாக்ட்ஸ் மற்றும் இம்போர்ட் மெசேஜஸ் என இரண்டு ஆப்ஷன்கள் தெரியும். இனி இம்போர்ட் மெசேஜஸ் ஆப்ஷனை கிளிக் செய்து குறுந்தகவல்களை மறைத்து வைக்கலாம்.

* குறுந்தகவல்கள் மறைக்கப்பட்டு விடும்:
இம்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்ததும், அனைத்து குறுந்தகவல்களும் திரையில் தெரியும், இனி நீங்கள் மறைக்க வேண்டிய குறுந்தகவலை கிளிக் செய்து இம்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் யாராலும் உங்களது குறுந்தகவல்களை பார்க்க முடியாது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement