Ad Code

Responsive Advertisement

படிச்சா படிங்க...! படிக்காட்டி போங்க...!



திரும்பும் திசையெல்லாம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளம்பர பதாகைகளும், சுவரொட்டிகளும் தான் தென்படுகின்றன.

காசுக்கு கலவி செய்யும் கூட்டமொன்று கல்வியின் தரம் பற்றி காணொளி ஊடக விளம்பரங்களில் நொடிக்கு நொடி அபச்சாரமாய் விபச்சாரம் செய்கின்றன.

எங்கள் பள்ளியில் அது இருக்கு...
எங்கள் கல்லூரியில் இது இருக்கு என்றும், மண்ணைப் பொன்னாக்கி உங்கள் குடிசையை கோபுரமாக்குவோம் என்றும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க அப்பாவிகளை நோக்கி கவர்ச்சித்தூண்டில்கள் வீசப்படுகின்றன.

மூன்று வயது குழந்தையின் மூளைக்குள் ஆறு வயது குழந்தையின் அறிவை, அறுவை சிகிச்சை செய்தாவது திணித்துவிட வேண்டும் என்ற அவசரமும், பேராசையும் கொண்ட பெற்றோர்களும்....

படிக்காமல் பட்டம் பெற்று, உழைக்காமல் உயர்ந்து விடத் துடிக்கும் இளைஞர்களின் கூட்டமும் இந்த கவர்ச்சித் தூண்டில்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளி உலகில் தங்களை கலியுக காமராசர்களாக காட்டிக்கொண்டு உள்ளுக்குள் கல்வியை காசாக்கிவிடத் துடிக்கும் கயவர்களிடம்....

கசாப்புக் கடை முதலாளிகளிடம் காசை வாங்கிக்கொண்டு கறிக்கு சினை ஆட்டைக் கூட விற்கும் மந்தையின் சொந்தக்காரனைப் போல் இந்த கல்வி வியாபாரச் சந்தையில் முதலாளிகளிடம் பெட்டிகளை வாங்கிக்கொண்டு நம் அடுத்த தலைமுறையை விற்றுக்கொண்டிருக்கின்றன பகட்டு விளம்பரங்களால் ஆட்சியை பிடித்த அரசுகள்.

# இதனால் பாதிக்கப்படப் போவது இளைஞர்களின் எதிர்காலம் மட்டுமல்ல...
இளைஞர்களின் எண்ணிக்கையை மட்டுமே பெரும் சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் எதிர்காலமும் தான் என்பதை அரசுகளும் நாமும் உணர்ந்து திருந்தாதவரை அழிவுப் பாதையில் நடைபோடும் கல்வியின் கால்களை தடுத்து நிறுத்த வழியேயில்லை....

ச.தாஸ்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement