Ad Code

Responsive Advertisement

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை : தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரி உள்ளது. இதில், 2017-18ம் கல்வியாண்டில் இளங்கலை படிப்பில் மொத்தம் 2,820 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இதற்கு, கடந்த மே 12ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 21,015 மாணவர்கள், 28,014 மாணவிகள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 49,030 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் தரவரிசை பட்டியலை நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார். 

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா, கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி, சேலத்தை சேர்ந்த சோபிலா, தருமபுரியை சேர்ந்த பழங்குடி இன மாணவி சவுமியா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாக்சைன் மற்றும் திண்டுக்கல் சேர்ந்த ஆர்த்தி ஆகிய  மாணவிகள் கட் ஆப் மதிப்பெண் 200 பெற்று முதல் ஆறு இடங்களை பிடித்தனர்.  

மேலும், 199.75 கட் ஆப் மதிப்பெண்ணை 4 பேர் பெற்றுள்ளனர். தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. இதில், சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 16ம் தேதியும், பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடக்கிறது. மாணவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement