நெல்லை அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அடிப்படை வசதியின்றி, போதுமான வகுப்பறைகள் இன்றி செயல்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் உள்ள அனைத்து கிராமங்களிலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இருப்பினும், அரசு அவற்றிற்கு போதிய கவனம் செலுத்தாததால் மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். நெல்லை, தருவையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த ஆண்டு, 250 மாணவ, மாணவியர் பயின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் இரு வகுப்புகளுடன், தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகள் செயல்படுகின்றன.
இந்த ஆண்டில் கூடுதலாக, 66 மாணவர்கள் சேர்க்கைக்கு பின், மாணவர்களின் எண்ணிக்கை, 316 ஆக உயர்ந்துள்ளது. இரு வகுப்புகள் கட்டடம் இல்லாமல் மரத்தடியிலும், 1964ல், பள்ளி துவக்கப்பட்ட போது கட்டப்பட்ட உடைந்த ஓட்டுக் கட்டடத்திலும் செயல்படுகிறது. அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளிக்கு சொந்தமான, இரு வகுப்பு அறைகள் தற்போது பயன்படாமல் உள்ளன.
அவற்றை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தர மறுப்பதால், துவக்கப் பள்ளி மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். எனவே, கல்வித் துறை அதிகாரிகள், இது குறித்து நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை