Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் கடத்தலை தடுக்க பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

பள்ளி மாணவர்கள் கடத்தலை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 11 கட்டுப்பாடுகளை விதித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 


சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் பாதுகாப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி நடந்த கூட்டத்தில் கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ஜெயராம், இணை கமிஷனர்கள் பாஸ்கரன், சந்தோஷ்குமார்,  போக்குவரத்து இணை கமிஷனர்கள் பாவனீஸ்வரி, பிரேம் ஆனந்த் சின்ஹா, 300 பள்ளிகளில் இருந்து தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்தாய்வில், பள்ளிகளிலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டு, பாதுகாப்பு தொடர்பாக அவர்களது குறைகள் மற்றும் தேவைகள் கேட்டறியப்பட்டது. காவல் துறை சார்பில் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

* அனைத்து பள்ளிகளிலும், உட்புறம் மற்றும் வெளிப்புறம் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். முக்கியமாக பள்ளி நுழைவு வாயில் மற்றும் சாலை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். 

* மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி வாகனங்களில் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்கும் போது, காவல்துறையில் நன்னடத்தை சான்று பெற்ற பின்னரே அவர்களை பணிக்கு நியமிக்க வேண்டும்.

* பள்ளி வாகனங்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்வதுடன், அவ்வப்போது அதன் இயக்கம் மற்றும் உட்புறம் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

* தனியார் ஆட்டோ மற்றும் வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்லும் நபர்களின் முழு விவரங்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்து தெரிந்துக்கொண்ட, பின்னரே மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நியமிக்க வேண்டும். மேலும், அந்த ஆட்டோ மற்றும் தனியார் வாகன ஓட்டுநர்களின் விவரங்களை பள்ளிக்கு தெரிவிக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

* பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாக வந்து செல்வது குறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களுடன் மாதம் ஒரு முறை கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்க வேண்டும்.

* தங்கள் பள்ளிக்குட்பட்ட காவல் நிலையத்தின் தொலைபேசி எண், ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆகியோரது தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களை தவறாமல் பெற்றுக்கொண்டு, அவசர காலத்தில் அவர்களை தொடர்பு கொண்டு காவல்துறை தொடர்பான உதவிகள் பெறலாம்.

* பள்ளிக்கூடங்களின் வெளியே திண்பண்டங்கள், ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டு பொருட்களை விற்பவர்களை அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் உள்ள நீச்சல் குளம் இருந்தால், அதனை சுற்றி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கண்காணிக்க வேண்டும். மேலும், பயிற்சியாளர் அல்லது ஆசிரியர்கள் துணையில்லாமல் மாணவர்கள் அப்பகுதிக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement