Ad Code

Responsive Advertisement

அங்கன்வாடிகளுக்கு பாடத்திட்டம் : தனியாருக்கு நிகரான கல்வி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் மூன்று முதல் ஆறு வயது குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு 'ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்', 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப 'ஆடிப்பாடி விளையாடு பாப்பா' என்ற பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.ஆனால், பாடத்திட்டம் குறித்த விபரம் வழங்கப்படாமல் உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு கற்பிக்க கூடிய தலைப்புகள் மட்டும் மாதந்தோறும் வழங்கப்பட்டன.

பொறுப்பாளர்கள் அந்த தலைப்புக்கு உரிய பாடல்கள், உரையாடல்களை உருவாக்கி குழந்தைகளுக்கு கற்பித்தனர்.தற்போது பாடத்திட்டம் அடங்கிய புத்தகங்கள் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில் 11 மாதங்களுக்கு செயல்பாடுகள் குறித்த தலைப்புகள், கற்பித்த பாடங்களை மீள் பார்வை செய்வது குறித்த விபரங்கள் உள்ளன.'இதன்மூலம் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையான கல்வி,அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement