மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.
'அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள், இத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், விரைவில் வர உள்ளன.
'நீட்' தேர்வில், மத்திய பாடத்திட்ட மாணவர்கள், 'ரேங்க்' பட்டியலில் அதிகளவில் முன்னிலை பெற வாய்ப்புள்ளதாக, தமிழக அரசு கருதுகிறது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடும். எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட நிபுணர்களுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணை, இரண்டு நாட்களில் வெளியாகும்'
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை