Ad Code

Responsive Advertisement

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளது.  

இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் வரவில்லை. இந்நிலையில் இந்த பரிந்துரைகள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என ஒரு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

இதில் வீட்டு வாடகை அலவன்ஸ் 27% உயர்வு உட்பட பல அலவன்ஸ்களை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 7ஆவது பே கமிஷன் ஆணையை செயல் படுத்த ரூ 65000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பற்றாமல் போனால் அரசு மேலும் தொகைய உயர்த்த வேண்டி வரும்.
இந்த முறை 7ஆவது பே கமிஷன் நிறைய அலவன்சுகளை ஒழித்த போதிலும் பல அலவன்ஸ் தொகைகளை அதிகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement