வேலூர்: கல்வி தரத்தை மேம்படுத்த `வேலூர் மாவட்டம்'' 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் 3 ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் 421 நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவுப்படி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு அரசு பள்ளிகள் உள்ளதால் பல ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் மாவட்டம் வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என பிரிக்கப்பட்டது.
தற்போது பிரிக்கப்பட்ட இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகமாக உள்ளது. இதில் அரசு பள்ளிகளே அதிகமாக உள்ளதால் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. அதேபோல் அதிகளவு அரசு பள்ளிகளும், அதிகளவு மாணவர்களும் படிப்பதால் வேலூர் மாவட்டம் கல்வி தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியே உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் கல்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த அதை 2 கல்வி மாவட்டங்களாக உள்ளதை 3 கல்வி மாவட்டங்களாக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதாவது தற்போது வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்களாக உள்ளது. இதை இன்னொரு மாவட்டமாக ராணிப்பேட்டை கல்வி மாவட்டமாக பிரிப்பதற்கு பள்ளிக் கல்வி இயக்குனரிடம் முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை அனுப்பி உள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை