Ad Code

Responsive Advertisement

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர் 

தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

Post a Comment

1 Comments

  1. Sir .... please clarify my doubt.... This is selected list for job or cv selection list

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement