Ad Code

Responsive Advertisement

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது. இதன்படி திங்கட்கிழமை பொதுவழிபாட்டு கூட்டம், பிற நாட்களில் வகுப்பறை வழிபாட்டு கூட்டம் கொண்டுவரப்பட்டது. 

இதன்படி பொது மற்றும் வழிபாட்டு கூட்டம் 20 நிமிடங்கள் வரை நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒவ்வொரு மாணவனும் பிழையின்றி பாடவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை 335ஐ புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் வகுப்பு வழிபாட்டு கூட்டத்தை மாற்றி, ெபாது வழிபாட்டு கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் எல்லா மாணவனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டியதில்லை. யாராவது ஒரு மாணவன் பாடினால் போதும்.

இதுதவிர 20 நிமிடமாக இருந்த திங்கட்கிழமை மட்டும் பொதுவழிப்பாட்டு கூட்டம் 3 நிமிடம் குறைத்து, 17 நிமிடமாகவும், பிற வேலை நாட்களில் 20 நிமிடங்கள் இருந்த வழிபாட்டு கூட்டம், 10 நிமிடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் மாணவர்கள் முன்னின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் பாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் விளக்கம், செய்தி வாசித்தல், பொது அறிவு, பிறந்த நாள் வாழ்த்து என அனைத்தையும் 10 நிமிடங்களில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் முன்னின்று வழிபாட்டு கூட்டம் நடத்தும் வகையில் வாய்ப்பு கிட்டுமா என்ற சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement