Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : போக்குவரத்து ஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் - ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப ஐகோர்ட் கிளை உத்தரவு


போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கிற்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் தாக்கல் செய்த மனு: 

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது. அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், சேஷாயி முன்பு மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். வராதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement