போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்கள், திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளனர். இதனால் அரசுப் பேருந்துகள் இயங்காத நிலை உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிப் பேருந்தை இயக்கி வரும் ஓட்டுநர்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஓட்டுநர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களிடம், சார் ஆட்சியர் மேகநாதரெட்டி, துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியதையொட்டி, உரிய ஒத்துழைப்பை அளிப்பதாக ஓட்டுநர்களும் தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை