Ad Code

Responsive Advertisement

விடைத்தாள் திருத்தத்தில் அலட்சியம் : பேராசிரியர்கள் மீது நடவடிக்கை

'விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் காட்டும் பேராசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து, துணை வேந்தர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன், உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன், செயலர் சுனில் பாலிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் நடந்த இக்கூட்டத்தில், பல்கலைகளின் அறிக்கைகள், வரவு - செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கீதா, தேர்வுத் துறையின் வரவு - செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, கடந்த ஆண்டில் தேர்வுத் துறை வாயிலாக, விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்ததன் மூலம், 10 லட்சம் ரூபாய் வரை, வருவாய் கிடைத்துள்ளதாக, அவர் தெரிவித்தார். அதையடுத்து, உயர் கல்வி செயலர் சுனில் பாலிவால், 'இந்தளவுக்கு வருவாய் வரும் அளவுக்கு, மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நிலை, ஏன் ஏற்பட்டது' என, கேள்வி எழுப்பினார். 

பின், அவர் கூறியதாவது: விடைத்தாள்களை திருத்தும்போது, பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மாணவர்கள், மறுமதிப்பீடு கேட்கும் அளவுக்கு, அலட்சியமாக இருக்கக் கூடாது. மறுமதிப்பீட்டில், எத்தனை ஆசிரியர்கள் தவறாக திருத்தி, மதிப்பெண் வழங்கியுள்ளனர் என்ற பட்டியலை தயாரிக்க வேண்டும். எதிர்காலத்தில், தவறாக விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்கள் மீது, துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement