வருது... வருது... அடுத்து கலக்க வருது ஜியோ ஃபைபர் ஹோம் பிராண்ட் பேண்ட் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர் சேவை மையம் சார்பில் ட்விட்டரில் வழங்கப்பட்ட தகவலில் ஜியோஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவைகள் ஆறு நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுக்க ஜியோ தாக்கத்தை ஏற்படுத்த அந்நிறுவனம் மேலும் சில நகரங்களில் பிராட்பேண்ட் சோதனையை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பு ஜியோவின் முதல் காலாண்டு வர்த்தக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இந்த சேவை வழங்கப்படும் தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட நகரங்களில் துவங்கும் என ஜியோ சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ஜியோ ஃபைபர் பிரீவியூ பிராட்பேண்ட் சேவைகளை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் வேகம் குறித்து பலமுறை ட்வீட் செய்துள்ளனர். அதன்படி 1Gbps இணைப்பில் 70Mbps முதல் 100Gbps வரையிலான வேகம் கிடைத்ததாக தெரிவித்திருந்தனர்.
அதிகபட்சம் பூனேவில் 743.28Mbps வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய சுற்றறிக்கையில் ஜியோஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் மாதம் 100Mbps வேகத்தில் 100 ஜிபி டேட்டா வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 100 ஜிபி பயன்படுத்திய பின் வேகம் 1Mbps-ஆக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த முதல் மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதன் பின் ஒருமுறை கட்டணமாக ரூ.4000 - ரூ.4500 வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கட்டணம் ஜியோ ஃபைபர் வை-பை ரவுட்டருக்கானது என்றும் இந்த கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது பிராண்ட் பேண்ட் சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை