Ad Code

Responsive Advertisement

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கும் பி.எட். : சுந்தரனார் பல்கலையில் வாய்ப்பு

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், 2 ஆண்டு பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு 

2017--18ம் கல்வி ஆண்டில், தபால் வழியில் பி.எட். படிப்பதற்கான சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இதில் சேர தகுதியாக, இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், என்.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு ஆசிரியர் பட்டயப்படிப்பை நேர்முக வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடக்க கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு,புவியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரம், வணிகவியல், மனைஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விபரங்களை 'எம்எஸ்யுனிவ்.ஏசி.இன்' என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பிய விண்ணப்பத்துடன், 'பதிவாளர், நெல்லை மனோன்மணீயம் 

சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி' என்ற முகவரிக்கு பெறப்பட்ட 650 ரூபாய்க்கான காசோலையுடன் நேரில் வந்து உடனடியாக சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement