Ad Code

Responsive Advertisement

5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசி, கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.

தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், அமைச்சரையும், செயலரையும் சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்தனர்.

ஆறு ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்கல்வி துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, செங்கோட்டையன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை குளிர்விக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தி.நகரில், தன் சொந்த செலவில், நேற்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். 

இதில், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த, 200 பேர் பங்கேற்றனர்.

சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் தனித்தனியே, கோரிக்கை மனுக்களை வாங்கினர். அமைச்சர் வந்ததும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச அனுமதித்தார். பல மூத்த நிர்வாகிகள், அரசியல்வாதிகள் போல, அமைச்சரையும், அரசையும் வாழ்த்தி பேசி, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், 'ஐஸ்' வைத்தனர்.

சங்க நிர்வாகிகள் சுருக்கமாக கோரிக்கைகளை கூற அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், இயக்குனர் இளங்கோவன், அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி மற்றும் அதிகாரிகள், மேடையில் அமர்ந்து, கோரிக்கைகளை குறிப்பெடுத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நிர்வாகிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, நுாற்றுக்கணக்கான கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.

ஆசிரியர்களுக்கு, மதிய உணவாக பிரிஞ்சி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவையும், இடைவேளையில், கேசரி, வடை, டீ மற்றும் காபியும் தரப்பட்டது. நிகழ்ச்சி முடியும் வரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வெளியே அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நடந்த வளாகத்தில், இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement