Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகள் : செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



http://www.tnpsc.gov.in/DEHT-get_may2k17.html தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த தேர்ச்சியை பெற்றுள்ளன. மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணும் குறைவாகவே உள்ளது. நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' எடுத்த மாணவர்களின், எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அரசின் நிதி செலவில் இயங்கும் பள்ளிகள், அவற்றை முறையாக பயன்படுத்தியதா; ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினரா; மதிப்பெண் குறைவு, தேர்ச்சி சரிவு ஏன்; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என, செயல்திறன் அறிக்கை தர, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின்படி, புதிய செயல் திட்டம் தயாரிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் வகையில், கற்பித்தலை மாற்ற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆய்வு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement